NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தனித்துவமாக நடைபெற்ற தமிழரசு கட்சியின் மே தின கூட்டம்

தமிழரசுக் கட்சியின் தனித்துவமான ஒரு மே தின நிகழ்வாக அமைந்திருந்த இந்த நிகழ்வின் பேரணியானது பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் களுவாஞ்சிக்குடி காரியாலயத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு கல்லாற்றினை சென்றடைந்தது.

இந்தப் பேரணியில் தமிழ் தேசிய போராட்டம், தமிழின உரிமையைப் பிரதிபலிக்கும் வண்ணம் பல ஊர்திகளில் கலை அம்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. குறித்த ஊர்திகளை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதேசக் கிளையினர் ஏற்பாடு செய்ததுடன் ஒவ்வொரு பிரதேசத்தில் இருந்தும் பெருமளவிலான மக்களும் பங்குபற்றி இருந்தனர்.

மேதின அரங்கு நிகழ்வுகளில் ஆழ்கடல் மீனவர், நன்னீர் மீனவர், விவசாயிகள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய தொழிலாளிகள் சார்பாக அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிய மே தின அறிக்கைகள் வாசிக்கப்பட்டன. அதிதிகளின் பேச்சுக்கள், நடன நிகழ்வுகள், கவிதை அரங்கு மற்றும் நாடகம் என்பன இடம்பெற்றதுடன் நிகழ்வு நிறைவடைந்தன.

Share:

Related Articles