NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Instagram மூலம் ஏற்பட்ட பழக்கம் – சிறுமி கூட்டு வன்புணர்வு!

இந்தியா – மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தை சேர்ந்தவள் 15 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இன்ஸ்டாகிராம் சமூகவலைத்தளம் மூலம் வாலிபர் ஒருவரின் அறிமுகம் ஏற்பட்டு, நாளடைவில் சிறுமியிடம் அந்த வாலிபர் நட்பாக பழகி வந்துள்ளனர். கடந்த மாதம் 30ஆம் திகதி சிறுமியை வாலிபர் தனது இருப்பிடத்திற்கு வரவழைத்தார். இதனையடுத்து அங்கு சென்ற சிறுமியை அந்த வாலிபர் அங்கு வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இதன் பின்னர் அந்த வாலிபர் கடந்த 4ஆம் திகதி மீண்டும் சிறுமியை அழைத்து, அவரது நண்பர் உட்பட 2 பேரும் சேர்ந்து சிறுமியை மிரட்டி கூட்டு பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியுள்ளனர். செய்தனர். பின்னர் பல சந்தர்ப்பங்களில் 2 பேரும் சேர்ந்து சிறுமியை தொந்தரவு செய்ததால் சிறுமி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டின் பிரகாரம், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் பால்கர் மாவட்டத்தில் உள்ள தலசேரி பகுதியில் பதுங்கி இருந்த 20 வயதுடைய 2 வாலிபர்களையும் பொலிஸார் பிடித்து கைது செய்தனர். மேலும், இவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி எதிர்வரும் 9ஆம் திகதி வரை வரை பொலிஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share:

Related Articles