NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பொருளாதார பாதிப்பால் துறவறத்தை கைவிடும் பௌத்த துறவிகள்!

வருடாந்தம் 2,000 பௌத்த துறவிகள் தமது துறவறத்தை கைவிட்டு வெளியேறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க  தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியும் இதற்கு ஒரு காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னணி பௌத்த துறவிகள் மத்தியில் இந்த தகவலை வெளியிட்ட அவர்,

பொருளாதாரத்தை புத்துயிர் பெற அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்காக பௌத்த மதகுருமார்களின் ஆசீர்வாதங்களைப் பெற வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். 

முன்னதாக இலங்கையின் படையினர் ரஸ்யா மற்றும் உக்ரெய்ன் ஆகிய நாடுகளுக்கு கூலிப்படையினராக செல்வதற்கும் பொருளாதார நெருக்கடியே காரணம் என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

Share:

Related Articles