NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாராளுமன்றத்தில் சஜித்தின் வேண்டுகோள்.

முப்படைகளில் சேவையில் ஈடுபட்டுள்ள ஆனால், விடுமுறை நிறைவடைந்தும் நீண்ட நாட்களாக விடுமுறையின்றி கடமைக்கு சமுகமளிக்காத இராணுவ வீரர்களுக்கு, 2024 ஏப்ரல் 20 முதல் மே 20 வரை சேவையில் இருந்து விலகுவதற்கான பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது. இராணுவத்தில் இணைந்து விசேட பயிற்சி பெற்றவர்கள், இந்த பொது மன்னிப்பு காலத்தின் போது சேவையை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.2024 ஏப்ரல் 2 இற்கு முன்னர் விடுமுறையின்றி கடமைக்கு சமுகமளிக்காதவர்களுக்கும் பொது மன்னிப்பு காலத்தில் இராணுவத்தை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரச நிதியைப் பயன்படுத்தி முன்னெடுத்த கற்கைகள் தொடர்பான பத்திரங்களில் கையெழுத்திட்டுள்ள இவர்கள் பணம் செலுத்தியேனும் விலகுவதற்கு எதிர்பார்த்துள்ளனர். இவ்விவகாரம் தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.இதனை அனுதாபத்துடன் கருத்தில் கொண்டு, விடுமுறையின்றி கடமைக்கு சமுகமளிக்காதவர்களுக்கு பொது மன்னிப்பு காலத்தில், இராணுவ சேவையில் இருந்து சட்டபூர்வமாக வெளியேறுவதற்கு அனுமதி வழங்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

Share:

Related Articles