NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பத்திரிகையாளர்களை சந்தித்த வெற்றிமாறன்

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் வெற்றிமாறனும் ஒருவர். இவர் இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் கடந்த ஆண்டு விடுதலை முதல் பாகம் வெளிவந்தது.இப்படத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்திருந்தார். விஜய் சேதுபதியின் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விடுதலை இரண்டாம் பாகம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. விடுதலை இரண்டாம் பாகத்தில் கூடுதல் கதாபாத்திரங்கள் இணைந்துள்ளனர். மஞ்சு வாரியர், கென் கருணாஸ் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகியோர் இணைந்துள்ளார்களாம். இந்த நிலையில், சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தது வெற்றிமாறனிடம் விடுதலை 2 எப்போது, வாடிவாசல் நடக்குமா? என இரண்டு கேள்விகள் அவருடைய படங்கள் சம்மந்தபட்டு கேட்கப்பட்டது. இதற்கு வெற்றிமாறன் “விடுதலை 2 இன்னும் 15 நாட்களில் இருந்து 20 நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது. அது முடிந்தவுடன் ஓரிரு மாதங்களில் வெளியாகும். விடுதலை 2 முடித்தவுடன் வாடிவாசல் தான்” என கூறியுள்ளார்.

Share:

Related Articles