NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டீ-ஏஜிங் தொழில்நுட்பத்துடன் உருவாகும் GOAT.

டீ-ஏஜிங் தொழில்நுட்பத்துடன் உருவாகி வரும் தமிழ் திரைப்படம் GOAT. இந்த தொழில்நுட்பத்தை ஹாலிவுட் திரையுலகில் கடந்த பல வருடங்களாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், தமிழ் சினிமாவிற்கு இதுவே முதல் முறையாகும். GOAT படத்திற்கு முன் கமல் – லோகேஷ் கூட்டணியில் உருவான விக்ரம் திரைப்படத்தில் டீ-ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்த லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டார். ஆனால், நேரம் இல்லாத காரணத்தினால் அந்த காட்சிகளை விக்ரம் திரைப்படத்தில் வைக்க முடியவில்லை என அவரே பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்த நிலையில், GOAT திரைப்படத்தில் விஜய்யின் ஒரு கதாபாத்திரத்துக்கு டீ-ஏஜிங் தொழில்நுட்பத்தை படக்குழு பயன்படுத்தியுள்ளனர். பல கோடி செலவில் செய்யப்படும் இந்த டீ-ஏஜிங் விஷயத்திற்காக படப்பிடிப்பிற்கு முன்பே விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு சென்றிருந்தனர். மேலும் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்த நிலையில், மீண்டும் லாஸ் ஏஞ்சல்ஸ் ற்கு டீ-ஏஜிங் வேலைக்காக சென்றுள்ளனர். அங்கு டீ-ஏஜிங் தொழில்நுட்பத்தில் கைதேர்ந்த Lola VFX நிறுவனம் தான் GOAT திரைப்படத்தில் டீ-ஏஜிங் வேலைகளை செய்து வருகிறார்கள். அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை அர்ச்சனா கல்பாத்தி இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த Lola VFX நிறுவனம் ஹாலிவுட் திரையுலகில் இதுவரை வெளிவந்த அவெஞ்சர்ஸ், கேம் ஆஃப் துரோன்ஸ், மிஷன் இம்பாஸிபிள் ஆகிய பல பிரம்மாண்ட திரைப்படங்களில் பயணிற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles