NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

2024 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடரின் வீரர்கள் ஏலம் தற்போது கொழும்பில் நடைபெற்று வருகிறது. இதுவரை ஏலம் விடப்பட்ட வீரர்களில் தசுன் ஷானக 85,000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.இதன் மூலம் இந்த வருட லங்கா பிரீமியர் லீக் போட்டியில் தசுன் ஷானக கண்டி அணியை பிரதிநித்துவப்படுத்துவார். தனுஷ்க குணதிலக 22,000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.இவர் தம்புள்ளை அணியை பிரதிநித்துவப்படுத்துவார்.இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மத்தீஷ பத்திரனா 120,000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.இவர் கொழும்பு அணியை பிரதிநித்துவப்படுத்துவார்.

Share:

Related Articles