NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

7 யானைகளின் உடல்கள் அழுகிய நிலையில் மீட்பு!

பொலன்னறுவை தேசிய பூங்காவின் கால்வாய் பகுதியில் நேற்று (26) சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த காட்டு யானைகளின் 7 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

8, 9, 10 வயதுடைய ஐந்து குட்டி யானைகளின் உடல்களும், 30 மற்றும் 35 வயதுடைய இரண்டு பெரிய யானைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹந்தபன்வில வில்லுவாவின் கால்வாய் பகுதியில் ஏழு யானைகளின் உடல்கள் அழுகிய நிலையில் காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் பின்னர் சுற்றித் திரிந்த காட்டு யானைகள் ஓடை கால்வாயை கடக்கும் போது சேற்றில் அடித்து செல்லப்பட்டிருக்கலாமென வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles