மட்டக்களப்பு ஏறாவூரில் ஒரு தாய் தனது 11 வயது மகனை தலைகீழாக மரத்தில் கட்டிதொங்கவிட்டு அடித்து சித்திரவதை செய்த காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இந்த தாயார் முதல் கணவரை பிரிந்து இன்னொரு திருமணம் செய்துள்ளார். முதலாவத் திருமணம் மூலம் ஒரு மகனும் இரண்டாவது திருமணம் மூலம் இன்னொரு மகனும் உள்ள நிலையில் தற்போது இரண்டு மகன்களுடனும் தனியாகவே வசித்து வருகிறார்.
தன் மூத்த மகன் புகைபிடிப்பது தெரியவந்து அவரை தலைகீழாக மரத்தில் கட்டிதொங்கவிட்டு அடித்து சித்திரவதை செய்துள்ளார். அத்தோடு அவரின் இரண்டரை வயது மகனையும் அடித்து துன்புறுத்தியுள்ளமையம் தெரியவந்துள்ளது.
இரண்டாவது கணவர் ஏறாவூர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பேரில் இத்தாயார் கைது செய்யப்பட்டுள்ளார். அத்தோடு பிள்ளைகளை துன்புறுத்திய காணொளிகளும் அவரது தொலைபேசியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.