ரி 20 உலககிண்ண தொடரில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் 06 ஓட்டங்களால் தோல்வியடைந்ததை தாங்கிக் கொள்ள முடியாத பாகிஸ்தான் வீரர் மைதானத்தில் அழுத காணொளி வைரலாகி வருகிறது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 119 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 06 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இந்தப் போட்டியில் கடைசி 4 பந்துகளில் 17 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அப்போது, 8-வது விக்கெட்டுக்கு உள்ளே வந்த நசீம் ஷா இரண்டு பவுண்டரிகளை விளாசினார். ஆனால், அவரால் எஞ்சிய 6 ஓட்டங்களை எடுக்க முடியவில்லை. இதனால், வெற்றியின் அருகில் வரை வந்தும் வெற்றி பெற முடியவில்லையே என்ற வேதனையில் நசீம் ஷா மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதார்.அவரை சக துடுப்பாட்ட வீரரான ஷாகின் அப்ரிடி ஆறுதல் கூறி தேற்றினார்.