NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த கோழிகள் – கோழி இறைச்சி வாங்குவோருக்கு எச்சரிக்கை!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த நாட்களில் கோழி இறைச்சியை கொள்வனவு செய்யும் போது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

வெள்ள நிலைமை காரணமாக, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த கோழிக்குஞ்சுகளே இன்றைய நாட்களில் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக மாமிச உணவுகள் பற்றிய சோதனைகள் மற்றும் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சஞ்சய் இராசிங்க தெரிவித்தார்.

இவ்வாறான கோழி இறைச்சியை உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிப்பதால், அதில் அதிக கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“வெள்ளத்தில் சிக்கி இறந்த கோழிகளை சுத்தம் செய்து, பொதி செய்து விற்பனை செய்யும் மோசடி கும்பல் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. கடந்த சில நாட்களாக இது குறித்து எச்சரிக்கையாக இருந்தோம்.

நாடுமுழுவதும் தற்போது சுகாதார சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றது.

குறிப்பாக இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகள் வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்த கோழிகளின் இறைச்சி சிவப்பு நிறத்தில் காணப்படும். எவ்வளவு சூடாக்கி வேகவைத்தாலும் கிருமிகள் அழியாமல் போகலாம். இதுபற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால், உடனடியாக வாடிக்கையாளர் சேவை அதிகாரிக்கு தெரிவிக்கவும்.

சமூக வலைத்தளங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்கள் இருந்தால் மிகக் குறைந்த விலையில் ஆன்லைனில் பொருட்களைக் கொண்டுவருவதாக விளம்பரங்கள் வருகின்றன.

இதற்கு விழ வேண்டாம். இவை நுகர்வுக்கு தயாராக இல்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள். இவ்வாறான சந்தர்ப்பங்கள் இருக்கும் பட்சத்தில் 1977 என்ற எண்ணிற்கு அறிவிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles