NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குவைத்தில் பாரிய தீவிபத்து – பலி எண்ணிக்கை 41ஆக உயர்வு!

தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் நகரில் புலம்பெயர் தொழிலாளர்கள் வசிக்கும் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41ஆக அதிகரித்துள்ளது.

உள்ளூர் நேரப்படி காலை 6:00 மணிக்கு இந்த சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் தொழிலாளர்கள் தங்குவதற்கு பயன்படுத்தப்பட்டதாகவும், மேலும் அங்கு ஏராளமான தொழிலாளர்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டசன் கணக்கானவர்கள் மீட்கப்பட்டனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தீயில் இருந்து புகையை சுவாசித்ததன் விளைவாக பலர் உயிரிழந்துள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி அரச தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட 43 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 35 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தீயை கட்டுப்படுத்திவிட்டதாகவும், தீ ஏற்பட்டமைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தெற்கு குவைத்தில் மங்காப் நகரில் குடியிருப்பு கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் குறைந்தது 35 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் குறைந்தது நான்கு இந்தியர்களும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கட்டடத்தில் மலையாள மக்கள் அதிகம் வசிக்கின்றனர் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்தவர்களில் இருவர் தமிழகம் மற்றும் வட இந்தியாவை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அதிகாரிகளிடமிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் வெளியாகவில்லை.

குவைத் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, காயமடைந்தவர்கள் அனைவரும் பல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles