இலங்கை மத்திய வங்கி இன்றைய தினத்திற்கான ( 24.032025) நாணய மாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.இந்தநிலையில், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது .
அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 300.91 ரூபாவாகவும், கொள்வனவு விலை 292.40 ரூபாவாகவும் , கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 211.16 ரூபாவாகவும், கொள்வனவு விலை 202.52 ரூபாவாகவும் ,
ஐரோப்பிய யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 327.57 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 314.82 ரூபாவாகவும்,ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 390.64 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 376.44 ரூபாவாகவும் மற்றும் அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 191.11 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 181.72 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.