NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அங்குருவாதொட்ட கொலை வழக்கு – விசாரணையில் வெளியான தகவல்!

ஹொரணை – அங்குருவாதொட்ட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட தாய் மற்றும் அவரது 11 மாத கைக்குழந்தையின் பிரேத பரிசோதனை நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

விலங்குகள் கடித்ததால் அந்த உடல் உறுப்புகள் சேதமடைந்துள்ளதாக கூறுகின்றனர். அவர்களின் உடல் உறுப்புகள் மேலதிக விசாரணைக்காக அரசாங்க பகுப்பாவு திணைக்களத்திற்கு துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலைகள் தொடர்பில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரிடம் நேற்று பிற்பகல் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் சந்தேகநபர் தனது மன நிலை இன்னமும் குழப்பமடைந்துள்ளதாகக் கூறி மந்த நிலையில் வாக்குமூலம் வழங்கும் நிலை காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஹொரணை – வரக்காகொட பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபர், தனது வீட்டிற்கு அடுத்துள்ள கைவிடப்பட்ட வீட்டில் தங்கியிருந்த நிலையில், பொலிஸார் அவரைக் கைது செய்யச் சென்ற போது, ​​அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு தப்பிச் சென்றுள்ளார்.

சந்தேக நபருக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாகவும், அப்போது அவர் கத்திரிக்கோலால் தன்னை தானே வெட்டிக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் மயக்கமடைந்த சந்தேக நபர் பொலிஸ் காவலில் இருந்த போது ஹொரண ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இந்த கொலைகள் தொடர்பில் வாக்குமூலம் பெறும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles