NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அச்சிடுவதற்காக குவிந்துள்ள ஓட்டுநர் உரிமங்களின் எண்ணிக்கை 9 இலட்சத்தை கடந்தது!

மோட்டார் போக்குவரத்து துறையில் அச்சிடுவதற்காக குவிந்துள்ள ஓட்டுநர் உரிமங்களின் எண்ணிக்கை 9 இலட்சத்தை தாண்டியுள்ளது.

அட்டை பற்றாக்குறை மற்றும் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாதமையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் ஒரு வருடத்திற்கு முன்னர், ஓட்டுநர் உரிமம் அச்சிடஇ அட்டைகளை இறக்குமதி செய்ய முடியாத நிலை காணப்பட்டது.

பின்னர் ஆஸ்திரியாவிலிருந்து 10 இலட்சம் அட்டை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சிப் கொண்ட 5 இலட்சம் அட்டைகளும், QR குறியீடு கொண்ட 5 இலட்சம் அட்டைகளும் இறக்குமதி செய்யப்பட்ட போதிலும், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஓட்டுநர் உரிம அலுவலகத்தினால் தினசரி அச்சிடப்படும் அட்டைகளின் எண்ணிக்கை 2000ஆகும்.

அங்கு 2 இயந்திரங்கள் மட்டுமே நல்ல நிலையில் உள்ளன. சிப் உள்ள 5 இலட்சம் அட்டைகளும் அச்சடிக்கப்பட்டுள்ளதால்இ ஞசு குறியீடு கொண்ட அட்டைகளை அச்சடிக்கும் பணி நேற்று முதல் தொடங்கியது.

இம்மாதம் மேலும் 3 அச்சு இயந்திரங்கள் பெறப்படவுள்ளதால், அடுத்த மாதம் முதல் நாளொன்றுக்கு 1000 தொடக்கம் 7000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்பட உள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இதனால், தற்போது குவிந்து கிடக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் சாரதி அனுமதிப்பத்திரம் 6 மாதங்களில் வழங்க எதிர்பார்க்கப்படுவதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

மேலும், தற்போது தற்காலிக ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களின் உரிமம் காலாவதியாகி இருந்தால், ஓட்டுநர் உரிம அட்டை இன்னும் கிடைக்கவில்லை என்றால், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலகம் அல்லது மாவட்ட அலுவலகங்களில் காலத்தை நீட்டிக்க முடியும் என குறிப்பிடப்படுகின்றது.

Share:

Related Articles