NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அடிலெய்ட் சர்வதேச டென்னிஸ் போட்டி Update!

அடிலெய்ட் சர்வதேச டென்னிஸ் போட்டி அவுஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

இந்த தொடரில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், ரஷ்யாவின் லியுட்மிலா சாம்சோனோவா உடன் மோதினார்.

இந்த போட்டியில் முதல் செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் லியுட்மிலா சாம்சோனோவாவும், 2வது செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் மேடிசன் கீஸும் கைப்பற்றினர். தொடர்ந்து நடைபெற்ற 3வது செட்டில் 3-0 என்ற புள்ளிக்கணக்கில் மேடிசன் கீஸ் முன்னிலையில் இருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக லியுட்மிலா சாம்சோனோவா காயம் அடைந்தார். இதன் காரணமாக அவர் போட்டியில் இருந்து வெளியேறினார். இதனால் மேடிசன் கீஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

Share:

Related Articles