உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு சித்திரை தமிழ் சிங்கள புத்தாண்டிற்கு முன்னதாக நடாத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதற்காக வேட்புமனுக்களை மீள அழைப்பது பொருத்தமானதாக இருக்கும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரரை இன்று பிற்பகல் தரிசனம் செய்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை, மாகாண சபை தேர்தலும் அடுத்த ஆண்டு நடாத்தப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.