NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அதானி நிறுவனத்தின் மன்னார் காற்றாலை திட்டம் குறித்து விசாரணை செய்ய உயர்நீதிமன்றம் தீர்மானம்!

மன்னார் பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு, இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு அமைச்சரவை வழங்கிய அனுமதியை செல்லுப்படியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட 5 அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, இந்த மனுக்கள் மீதான விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் நேற்று தீர்மானித்தது.

S.துரைராஜா, A.H.M.D நவாஸ், ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கபுலி ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மற்றும் பூநகரியில் இரண்டு காற்றாலை மின்சார நிலையங்களை அமைக்க அதானி நிறுவனம் முன்வந்துள்ளது.

484 மெகாவோட் ஒட்டுமொத்த நிறுவப்பட்ட திறனை நோக்காக கொண்டு, ஒரு பில்லியன் டொலர்களுக்கு மேலான ஒட்டுமொத்த முதலீட்டுடன் இந்த திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles