NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அதிகளவான கடவுச்சீட்டு விநியோகம் செய்யப்பட்ட ஆண்டு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கடந்த 2022ஆம் ஆண்டில் 9 இலட்சத்திற்கும் அதிகமான கடவுச்சீட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டில் மொத்தமாக 911,689 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இது வரலாற்றில் இதுவரை, ஒரு வருடத்தில் வழங்கப்பட்ட அதிகூடிய கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையாகும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.எஸ்.எச்.ஜே.இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

மேலும், அதிகூடிய கடவுச்சீட்டு விநியோகத்தின் மூலம் 2022ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்பட்ட வருவாய் இலக்கை விட, தேசிய வருமானத்துக்கு 23.8 பில்லியன் ரூபாவை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் பெற்றுக் கொடுத்துள்ளது.

இது கடந்த ஆண்டு வருமானம் மற்றும் கருத்தில் கொள்ளும்போது 174.8 சதவீதம் அதிகமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

Share:

Related Articles