(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
பச்சை மிளகாயின் விலை 1300 ரூபாவாக அதிகரித்துள்ளதாலும், சந்தையில் பச்சை மிளகாய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாலும் நுகர்வோர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த நிலைமைகள் தொடர்பில் பலர் கருத்து தெரிவிக்கையில், பச்சை மிளகாயின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், பச்சை மிளகாய்க்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நிலைமைகளினால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
பச்சை மிளகாய் மொத்த விற்பனை விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பச்சை மிளகாய் விற்பனை வெகுவாக குறைந்துள்ளதாகவும், முன்பு போல் பச்சை மிளகாய் விற்பனைக்கு அதிக கேள்வி இல்லாதமையாலும் பச்சை மிளகாய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மரக்கறி வியாபாரிகள் பலர் கவலை வெளியிட்டுள்ளனர்.