NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அதிரடி ஆட்டத்தில் அசலங்க – பங்களாதேஷ் அணிக்கு இமாலய இலக்கு…!

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி 20 போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு 207 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 206 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

இலங்கை அணி சார்பில் சதீர சமரவிக்கிரம அதிகபட்சமாக 61 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார்.

குசல் மெந்திஸ் 59 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சரித் அசலங்க ஆட்டமிழக்காமல் 21 பந்துகளில் 6 ஆறு ஓட்டங்களுடன் 44 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில்,  Rishad Hossain , Taskin Ahmed மற்றும் Shoriful Islam ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

அதன்படி, பங்களாதேஷ் அணிக்கு 207 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles