சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் வாகனங்களை ஓட்டும்போது 50 மீற்றர் தூர இடைவெளியை பேணுமாறு அதிவேக வீதி போக்குவரத்து பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளது.
மின்சாரக் காட்சிப் பலகைகளில் குறித்த எச்சரிக்கைகளை காட்சிப்படுத்த வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறைந்த வெளிச்சம் காரணமாக சாரதிகள் தங்கள் வாகனங்களில் முன் பக்க மற்றும் பின் பக்க விளக்குகளை எரிவிட்டு செல்லுமாறு பொலிஸார் சாரதிகளுக்கு அறிவுறுத்தியள்ளனர்.