இலங்கையின் சந்தையில் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படும் உணவுகளில் 90 வீதத்திற்கும் அதிகமானவை பாவனைக்கு தகுதியற்றவை என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உறுப்பினர் பொது சுகாதார பரிசோதகர் சந்துன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அரிசி, பருப்பு, உப்பு, எண்ணெய், மரக்கறிகள் உட்பட நாம் அன்றாடம் உண்ணும் பெரும்பாலான அத்தியாவசிய உணவுப் பொருட்களில் வியாபாரிகள் இரசாயனப் பொருட்களைச் சேர்ப்பதால் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பட்டர் கேக் உட்பட சந்தையில் விற்பனை செய்யப்படும் பல வகையான கேக்களில் பட்டர் தவிர முட்டைகள் எதுவும் இல்லை என பொது சுகாதார பரிசோதகர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.