NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அநுராதபுரத்தில் கடந்த இரு தினங்களில் 5 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம்!

அநுராதபுரம் பிரதேசத்தில் கடந்த 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் 5 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அநுராதபுரம் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, அநுராதபுரம், காலதிவுல்வௌ
பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 14 வயதுடைய சிறுமியொருவரை ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 25 வயதுடைய சிறுமியின் காதலன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அநுராதபுரம், பரசன்கஸ்வௌ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 16 வயதுடைய சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிறுமியின் தந்தையின் 39 வயதுடைய சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், அநுராதபுரம், தம்புத்தேகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 15 வயதுடைய சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 17 வயதுடைய சிறுவனொருவன் தம்புத்தேகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், அதே பகுதியில், 14 வயதுடைய சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிறுமி கல்வி கற்கும் பாடசாலை அதிபர் உட்பட மூவர் கைது செய்ய செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அநுராதபுரம், திறப்பனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 16 வயதுடைய சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 24 வயதுடைய இளைஞரொருவர் திறப்பனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles