அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று கொழும்பில் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.
பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறிப்பாக, இலங்கையில் உள்ள 3 தனியார் பல்கலைக்கழகங்களுக்கு பட்டப்படிப்பு அந்தஸ்து வழங்கப்படுவதை எதிர்த்தும், உத்தேச தொழிலாளர் சட்டம், ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் முன்மொழிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் இந்தப் போராட்டம் நடத்தப்படும் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த போராட்டத்துக்கு பல அரச பல்கலைக்கழக மாணவர் சங்கங்களும் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.