NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று முதல் விடுமுறை!

நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றும் நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த விடுமுறை வழங்கப்படுவதாகவும் அதற்கமைய கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் 18 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே அனைத்து பல்கலைக்கழகங்களும் இன்றும் நாளையும் மூடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இந்த விடயம் தொடர்பான அறிவுறுத்தல் அனைத்து பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தேர்தலில் வாக்களிப்பதற்கு இயலுமான வகையில் அனைத்து தனியார் மற்றும் அரச வங்கிகள், நிதி நிறுவன ஊழியர்களுக்கு விடுறை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

வழமையான விடுமுறை காலத்தை குறைக்காமல், சம்பளத்தை இரத்துச் செய்யாமல் விடுமுறையை வழங்குமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.
இதேவேளை, வாக்களிப்பதற்காக உரிய முறையில் விடுமுறை வழங்கப்படவில்லை என சில வங்கிகள் மற்றும் ஏனைய நிதி நிறுவன ஊழியர்களிடம் இருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளுக்காக திணைக்களப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையினால் நாளை பரீட்சை சான்றிதழ்கள் வழங்கப்படமாட்டாது என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, அன்றைய தினத்திற்கான இணையவழி சேவைகள் இயங்காது எனவும் பரீட்சை திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles