NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அனைத்து வகை வாகனங்களையும் இறக்குமதி செய்ய அனுமதி..!

அனைத்து வாகனங்களையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

உரிய கொள்கைகளை அமைச்சரவையில் முன்வைத்ததன் பின்னர் வாகன இறக்குமதி தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதி தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக அமைச்சரவையில் இது பற்றிய விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.

சமீபத்தில் பொது போக்குவரத்து, சுற்றுலா போன்றவற்றிற்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பதாக கூறினர்.

அதற்கு தேவையான கொள்கை இதுவரை வேலை செய்யப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles