NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் பரீட்சை திகதி அறிவிப்பு..!

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் தரம் 1, 2மற்றும் 3ஆம் வகுப்புகளுக்கான பரீட்சைகள் நடத்தப்படும் திகதி தொடர்பான அறிவிப்பை இலங்கை அபிவிருத்தி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி குறித்த பரீட்சைகள் ஜூன் மாதம் 30 ஆம் திகதி நடைபெறுவதுடன் இதற்காக 52,756 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பரீட்சை நாடு முழுவதிலும் உள்ள 353 நிலையங்களில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, பரீட்சைக்கான நுழைவுச் சீட்டுகள் விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனைப் பெற்றுக்கொள்ளாத பரீட்சார்த்திகள் www.slida.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக தங்களின் நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles