அபுதாபியில் நடத்தப்பட்ட மிகப்பெரிய அதிர்ஸ்டலாப சீட்டிழுப்பான Big Ticket இல், இலங்கை தமிழர் ஒருவர் பெரும் தொகை பரிசை வென்றுள்ளார்.
அவர் 20 மில்லியன் திர்ஹாம் (இலங்கை ரூ.1762093546.80) பரிசை வென்றுள்ளார்.
துரைலிங்கம் பிரபாகர் என்பவரே 255 பிக் டிக்கெட் லைவ் டிராவில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
துரைலிங்கம் பிரபாகர் 16 ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு குடிபெயர்ந்தார், தற்போது டுபாயில் உள்ள வாலட் சேவை நிறுவனத்தில் மேற்பார்வையாளராக உள்ளார்.
துரைலிங்கம் பிரபாகர் கடந்த ஐந்து வருடங்களாக தனது நண்பர்கள் 10 பேர் கொண்ட குழுவுடன் சேர்ந்து பிக் டிக்கெட்டுகளை வாங்குகிறார்.