NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அமெரிக்காவுக்கு ‘பிராண்டட்’ பொருள்களின் போலிகளை கொண்டு செல்வோருக்கு எச்சரிக்கை!

அமெரிக்காவுக்குச் செல்வோர், பிராண்டட் பொருள்களின் போலிகள் என்று தெரியாமலோ தெரிந்தோ வாங்கி வைத்திருந்தால், அவற்றை கொண்டு செல்லாதீர்கள். சென்றால், அவை சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படும்.

அமெரிக்கா செல்கிறோம் என்று புமா, அடிடாஸ், நைக் போன்ற உயர்தர பிராண்டட் பொருள்களை தேடித் தேடி வாங்குபவர்கள், அதற்குரிய இடங்களில் வாங்குங்கள். ஒருவேளை பேரம் பேசி அடிமாட்டு விலைக்கு வாங்கி சபாஷ் போட்டுக் கொள்ள முயன்றால், அது போலியானதாக இருக்கலாம், அமெரிக்கா செல்லும்போது அவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிலும், பறிமுதல் செய்யப்படும் பொருள்கள், பயணிகளின் கண் முன்னே அழிக்கப்படுவதாகவும், துணிகளாக இருந்தால் கிழிக்கப்பட்டு குப்பையில் வீசப்படுவதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு விதிகள் சொல்வது என்னவென்றால், தனிநபர் ஒருவர், சட்டை, கைப்பை, காலணி என அனைத்து பயன்பாட்டுப் பொருள்களிலும் தலா ஒரு பிராண்டட் பெயரில் இருக்கும் போலியான பொருள்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கலாம். அதுவும் தனிநபரின் பயன்பாட்டுக்காக மட்டுமே, விற்பனைக்கு அல்ல, மற்றவை இதனை விட ஒன்று அதிகமாக இருந்தாலும் அவை பறிமுதல் செய்யப்பட வேண்டும். அதுவும், அந்த தனி நபர், இந்த ஒரு போலி பொருள் எனும் வாய்ப்பை 30 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே பெற முடியும்.

ஒரு பதிவு செய்யப்பட்ட பிராண்டட் பொருளின் பெயரில் அல்லது சின்னம் கொண்ட போலி பொருள்கள் அமெரிக்காவுக்குள் நுழைவது தவறு என்கிறது விதிமுறைகள்.

Share:

Related Articles