(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்றுவரும் ஜி7 குழுமத்தின் வருடாந்த உச்சி மாநாட்டிற்கு பிந்தைய ஆசிய சுற்றுப்பயணத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இரத்து செய்துள்ளார்.
மே 19ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஜி7 குழும வருடாந்த உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.
இந்நிலையில், கடன் நெருக்கடிக்கு மத்தியில் ஜி7க்கு பிந்தைய ஆசிய சுற்றுப்பயணத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இரத்து செய்துள்ளதாக, என வெள்ளை மாளிகை தகவல்கள் வெளியாகின.