அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அடிக்கடி இடம்பெற்றுவரும் நிலையில், அவற்றை தடுக்க அமெரிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
குறிப்பாக பாடசாலைகளில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவங்களுடன் சேர்த்து, அமெரிக்காவில் இந்த ஆண்டு இதுவரை 385 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், துப்பாக்கி வன்முறையை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் கொண்டுவர வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்கு கொண்டுவர ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகாரம் மூலம் புதிய சட்டத்தை கொண்டு வரப்போவதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார்.