(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
அமெரிக்காவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இந்திய வம்சாவளியினர் போட்டியிடவுள்ளனர்.
தற்போது அமெரிக்காவின் ஜனாதிபதியாக உள்ள ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்த வருடத்துடன் முடிவடையவுள்ளது.
அதற்கமைய, அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
தற்போது, தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, ஆளும் கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன், ரொபர்ட் கென்னடி, மரியன்னா வில்லியம்சன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.
குடியரசு கட்சி சார்பில் பர்கம், கிறிஸ்டி, விவேக் ராமசாமி, டிசாண்டிஸ், நிக்கி ஹாலே, முன்னாள் ஜனாதிபதியான டொனாட் டிரம்ப் உட்பட 13 பேர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ளனர்.
இப்பட்டியலில், குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹிர்ஷ் வர்தன் சிங்கும் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி, நிக்கி ஹாலே ஆகியோர் ஜனாதிபதி தேர்தலுக்குப் போட்டியிடும் நிலையில் தற்போது அந்தப் பட்டியலில் மூன்றாவது இந்தியராக ஹிர்ஷ் வர்தன் சிங்கும் இணைந்துள்ளார்.