NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அமைச்சர் மஹிந்த அமரவீர பொலிஸாரிடம் முன்வைத்துள்ள கோரிக்கை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கறவை மாடு திருடர்களை கைது செய்து அவர்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிருமாறு பொலிஸாரிடம் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்காலத்தில் கறவை மாடு திருட்டுகள் அதிகரித்து வருவதாக விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளால் முறைப்பாடுகள் அதிகரித்துள்ளமையினால் அமைச்சர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

நாளொன்றுக்கு சுமார் 20 லீற்றர் பால் கறக்கும் பசுக்கள் திருடப்படுவதாகவும், ஒரு வாரத்தில் ஒரு மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 35 பசுக்கள் திருடப்படுவதாகவும் விவசாய அமைச்சுக்கு கிடைத்த முறைப்பாடுகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட திருடர்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாரிடம் அமைச்சர் மஹிந்த அமரவீர கோரிக்கை விடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Share:

Related Articles