NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அமைதியை பேண முப்படையினருக்கு அழைப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் (40 ஆம் அத்தியாயம்) 12 ஆம் பிரிவினால் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கமைய,  பொது மக்களின் அமைதியை பேணுவதற்காக ஆயுதம் தாங்கிய படையின் சகல உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த அறிவிப்பை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ சற்று முன்னர் (23) சபையில் அறிவித்தார்.

பொதுமக்களின் அமைதியைப் நேற்று முதல் (22) நடைமுறைக்கு வருமாறு  இக்கட்டளை மூலம் இலங்கைத் தரைப்படை, இலங்கை கடற்படை, இலங்கை வான்படை ஆகியவற்றுக்கு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles