NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அரசாங்க சொத்துக்கள் குறித்து இன்றுவரை முறையான தணிக்கை நடத்தப்படவில்லை!

அரசாங்க சொத்துக்கள் குறித்து இன்றுவரை முறையான தணிக்கை நடத்தப்படவில்லை என கணக்காய்வாளர் நாயகம் W.B.M.C.விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

அரசு அதிகாரிகள் தங்கள் கடமைகளை முறையாகச் செய்யாதமையால் இதுபோன்ற நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தக் கணக்கியல் பணிகளை அரசு அதிகாரிகள் தாங்களாகவே செய்கின்றனர். எனினும், முறையாக தணிக்கை செய்யப்படாமையால், பல சிக்கல்களை இன்று எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் அரசு வாகனங்களின் எண்ணிக்கையை கூட சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காரணம், முறையான தணிக்கை அரச அதிகாரிகளால் செய்யப்படாமையினால் ஆகும்.

சமீபத்திய தணிக்கை அறிக்கைகளில் இதுதொடர்பான அதிக தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், பல்வேறு நிறுவனங்களுக்கு வாகன பற்றாக்குறை நிலவுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles