(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
அரச வைத்தியசாலைகளில் உள்ள கிளினிக்குகளில் இன்சுலின் பற்றாக்குறையால் நோயாளிகள் பணம் கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மிக சிலருக்கு மட்டுமே இன்சுலின் வாங்க முடியும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதனால் நீரிழிவு நோய் அதிகரித்து வருவதுடன் மக்களின் நோய்களும் மோசமடைந்து வருவதாக வைத்தியர் சமில் விஜேசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.