அர்ஜென்டினா நாட்டின் ஜனாதிபதியாக பொருளாதார நிபுணரான ஜேவியர் மிலி பதவியேற்றார்.
அர்ஜென்டினா கடுமையான பொருளாதாரா நெருக்கடிக்குளாகியுள்ள நிலையில் நடந்த தேர்தலில் ஜேவியர் அபார வெற்றி பெற்றுள்ளார்.
பதவியேற்புக்குப் பின்னர் பேசிய ஜனாதிபதி ஜேவியர் மிலி கூறுகையில்இ ‘இறைவன் மீதும்இ என் தேசத்தின் மீதும் ஆணையாக நான் இந்த ஜனாதிபதி பதவியில் உண்மையுடன்இ தேசபக்தியுடன் செயல்படுவேன். முந்தைய ஆட்சியாளர்களின் நடவடிக்கையால் நாடு அதிதீவிர பணவீக்கத்தை சந்தித்துள்ளது. அரசாங்கத்திடம் பணம் இல்லை. நிதி சீர்திருத்தம் தான் இப்போதைய தேவை. ஆனால் அதன் பலன்கள் அரசாங்கத்துக்கு வர வேண்டும். தனியார் துறைகள் ஆதாயமடையும் வகையில் இருக்கும்படியான சீர்திருத்தங்களாக இருந்துவிடக் கூடாது’ என்றார்.
அர்ஜென்டினாவின் 40 சதவீத மக்கள் தற்போது வறுமையில் உள்ளனர். 1.8 கோடி பேர் தங்களின் தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத நிலையில் உள்ளனர். உணவுக்கு வழியிலாது மோசமான வறுமையில் 10 சதவீத மக்கள் உள்ளனர்.
நாட்டில் வேலைவாய்ப்பின்மை 6.2 சதவீதமாக உள்ளது. கடுமையான பணவீக்கம்இ நாணய மதிப்பு சரிவு என அர்ஜென்டினா கடுமையான நிதிச் சுழலில் சிக்கியுள்ள சூழலில் ஜேவியரின் பதவியேற்பு அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேவியருக்கும் கடுமையான சவால்கள் காத்திருக்கின்றன.