(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் மத்திய கிழக்கில் இருந்து இலங்கைக்கு வந்த போது சுமார் மூன்றரை கிலோ தங்கத்தை கொண்டு வந்ததற்காக சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது அவர் அங்கு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்வதற்கான விவாதத்தில் நாளை கலந்து கொள்வதற்காகவே அவர் இலங்கை வந்துள்ளதாக வெளியிடப்பட்ட மூன்று வரிகள் கொண்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.