NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அவிசாவளை பிரதான வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 22 பேர் காயம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியின் ஹன்வெல்ல அம்குகம பகுதியில் இன்று (09) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸும் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் பேருந்து சாரதி உட்ப 22 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles