NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அவுஸ்திரேலிய ஓபன்: பி.வி சிந்து – ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற்றம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

அவுஸ்திரேலிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது.

இதில் நேற்று (03) நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்றில் முன்னாள் ‘நம்பர் வன்’ வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21-10, 21-17 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் சு லி யாங்கை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.

இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் 19-21, 21-19, 21-13 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் சி யூ ஜென்னை வீழ்த்தி காலிறுதியை எட்டினார்.

இந்தியாவின் பிரியான் ரஜாவத் 21-8, 13-21, 21-19 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் வாங் சூ வெய்யை விரட்டியடித்தார்.

இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2ஆவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-14, 21-10 என்ற நேர்செட்டில், சக நாட்டு வீராங்கனை ஆகார்ஷி காஷ்யப்பை தோற்கடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles