(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யும் காலம் நேற்று முன்தினத்துடன் (10) நிறைவடைந்த போதிலும், நியாயமான காரணம் இருப்பின் எவரும் ஜனாதிபதி அலுவலகத்தில் முறையிட முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (11) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.