NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆசியக் கிண்ணத்திலிருந்து பங்களாதேஷ் வீரர் எபடொட் ஹொஸைன் வெளியேற்றம் !

பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணத் தொடருக்கான பங்களாதேஷ் குழாத்திலிருந்து வேகப் பந்துவீச்சாளர் எபடொட் ஹொஸைன் நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டித் தொடரின் போது எபடொட் ஹொஸைனின் முழங்கால் பகுதியில் உபாதை ஏற்பட்டது. இவருக்கு உபாதை ஏற்பட்டிருந்த போதும் ஆசியக் கிண்ணத் தொடருக்கான 17 பேர்கொண்ட குழாத்தில் இணைக்கப்பட்டிருந்தார்.

தொடருக்கு இன்னும் குறைந்த நாட்கள் மாத்திரமே உள்ள நிலையில், எபடொட் ஹொஸைன் உபாதையிலிருந்து முழுமையாக குணமடையவில்லை என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. எனவே எபடொட் ஹொஸைன் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன் 20 வயதுடைய இளம் வேகப் பந்துவீச்சாளர் டன்சிம் ஹஸன் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

எபடொட் ஹொஸைன் இதுவரையில் 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இவரின் வெளியேற்றம் பங்களாதேஷ் அணிக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனினும் இவருக்கு பதிலாக இணைக்கப்பட்டுள்ள டன்சிம் ஹஸன் இதுவரை தேசிய அணிக்காக விளையாடாத போதும் முதற்தர போட்டிகளில் சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்தியுள்ளார்.

12 முதற்தர போட்டிகளில் 22 விக்கெட்டுகளையும், 37 லிஸ்ட் ஏ போட்டிகளில் 57 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார். பங்களாதேஷ் அணி ஆசியக் கிண்ணத் தொடரின் தங்களுடைய முதல் போட்டியில் இலங்கை அணியை இம்மாதம் 31ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles