NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆசியக் கிண்ணப்போட்டிகள் இன்று முதல் ஆரம்பம்!



ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று (30) ஆரம்பமாகவுள்ளது.

இந்தியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகியவை ஏ பிரிவில் பங்கேற்கும் அதே வேளையில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை பி பிரிவில் பங்கேற்கின்றன.

இந்த போட்டி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் இலங்கையில் 9 போட்டிகளும் பாகிஸ்தானில் 4 போட்டிகளும் இடம்பெறவுள்ளன.

இலங்கையின், கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச விளையாட்டுத் திடல், கண்டி – பல்லேகெலே சர்வதேச விளையாட்டுத் திடல்  பாகிஸ்தானின் லாஹூர் சர்வதேச விளையாட்டுத் திடல் மற்றும் மல்டன் சர்வதேச விளையாட்டுத் திடலிலும் போட்டிகள் இடம்பெறவுள்ளன.


பாகிஸ்தானின் – முல்தான் நகரில் பகலிரவு போட்டியாக இன்று பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி நடைபெறவுள்ளது.

அத்துடன், இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Share:

Related Articles