(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
FIFA உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடர்பிலான ஆசிய பிராந்தியத் தகுதிகாண் சுற்றுப் போட்டிகளில் விளையாட இலங்கை கால்பந்தாட்ட அணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நிபந்தனைகளுடன் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது.
FIFA உலகக் கோப்பை தகுதிகாண் சுற்றுகள் ஒக்டோபர் 12 மற்றும் 17 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இந்த உலகக் கோப்பை தகுதிகாண் போட்டிக்கு குறைந்தது 10 நாட்களுக்கு முன்னர் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இல்லை எனில், இலங்கை கால்பந்தாட்ட அணி தகுதிகாண் சுற்றுப் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்பட மாட்டாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.