(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
தாய்லாந்தின் பெங்கொக்கில் நடைபெற்றுவரும் 25ஆவது ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் இரண்டாம் நாளான நேற்று (13) இலங்கையின் 28 வயதான நதீஷா ராமநாயக்க தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
உஸ்பெகிஸ்தான், இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகளைப் பின்தள்ளி நதீஷா ராமநாயக்க தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
பெண்களுக்கான 400 ஓட்டப் போட்டியை 52.61 செக்கன்களில் ஓடி முடித்தே அவர் தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.
ஆசிய மெய்வல்லுநர் போட்டி ஒன்றில் நதீஷா வென்றெடுத்த முதலாவது பதக்கம் இதுவாகும். ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் தனிநபருக்கான போட்டி ஒன்றில் இலங்கைக்கு கிடைத்த 8ஆவது தங்கப் பதக்கமும் இதுவாகும்.