NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆசிய விளையாட்டு விழாவுக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் குழாம் அறிவிப்பு !

சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவுக்கான 15 பேர்கொண்ட வு20 குழாத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அதேநேரம் அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அணியின் தலைவராக துடுப்பாட்ட வீரர் குவைஸ் அக்ரம் நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ள குழாத்தில் தேசிய அணியின் முன்னணி வீரர்கள் பலரும் இடம்பெற்றுள்ளனர். இந்த குழாத்தில் பாகிஸ்தான் அணியின் அனுபவ வீரரான ஆசிப் அல இணைக்கப்பட்டுள்ளதுடன், ஹைடர் அலி, குஸ்தில் ஷாத, மொஹமட் ஹஸ்னைன் மற்றும் சான்நவாஸ் தவானி போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்னர்.

ஆசிய விளையாட்டு விழாவின் களமிறங்கும் பாகிஸ்தான் அணி தங்களுடைய முதல் போட்டியாக காலிறுதியில் விளையாடவுள்ளது. இதற்கு முன்னர் ஆசிய விளையாட்டு விழாவில் இரண்டு தடவைகள் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டதுடன், 2010ம் ஆண்டு பங்களாதேஷ் அணியும், 2014ம் ஆண்டு இலங்கை அணியும் தங்கப்பதக்கத்தை சுவீகரித்துக்கொண்டிருந்தன.

பாகிஸ்தான் அணியானது 2010ம் ஆண்டு மாத்திரம் ஆசிய விளையாட்டு விழாவில் விளையாடியிருந்ததுடன் மூன்றாவது இடத்தை பிடித்துக்கொண்டிருந்தது. இம்முறை ஆரம்பமாகவுள்ள ஆசிய விளையாட்டு விழாவில்இ கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 28ம் திகதி முதல் ஒக்டோபர் 7ம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles