NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆட்கடத்தல் குறித்து ஓமான் அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு !

ஆட்கடத்தல் குறித்த முறைப்பாடுகளை அளிப்பதற்காக ஓமான் பொலிஸ் சிறப்பு தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஓமானில் ஆட் கடத்தல்காரர்களால் பாதிக்கப்பட்டவர்கள், நேரடியாக ஓமான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்காக விசேட கையடக்க தொலைபேசி இலக்கம் மற்றும் இணையத்தளமொன்றையும் அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கமைவாக ‘www.nccht.com‘ என்ற இணையதள முகவரி ஊடாக அல்லது 10968 80077444 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் ஆட் கடத்தல் தொடர்பான முறைப்பாடுகளை பொதுமக்கள் அளிக்க முடியும் எனவும் ஓமன் பொலிஸ்துறையின் தேசிய மனித கடத்தல் தடுப்புக் குழுவால் இந்த முறைபாடுகள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆங்கிலம் மற்றும் அரபு உட்பட 12 மொழிகளில் முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படுமெனவும்,குறிப்பாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஓமன் அரசாங்கத்திடம் விடுத்த விசேட கோரிக்கைக்கு அமைவாக, ஆட் கடத்தல் தொடர்பான முறைப்பாடுகளை சிங்கள மொழியில் சமர்ப்பிக்கவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது இத்தகைய முறைப்பாட்டிற்குப் பின்னர், ஓமான் பொலிஸ்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மீட்டு நாட்டில் உள்ள ஒரு சிறப்பு பாதுகாப்பு இல்லத்தில் வைப்பதுடன், ஆட் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு எதிர்காலத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஓமான் அரசாங்கம் அறிவித்துள்ளது.

Share:

Related Articles