NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அநுராதபுரத்தில் 21 மணிநேர நீர்வெட்டு!

அநுராதபுரம் – நுவரவௌ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் துப்புரவு மற்றும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மற்றும் நாளை 21 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று இரவு 9 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அநுராதபுரம் மாவட்டத்தில் – கலத்தெவ, நெலும்கன்னிய, தரியங்குளம், கல்குளம், கவரெக்குளம், வண்ணம்மடுவ, குஞ்சிக்குளம், குருந்தங்குளம், மாத்தளை சந்தி, சாலிய மாவத்தை, தன்னயன்குளம், பண்டாரபுளியங்குளம், தெப்பன்குளம், ஜெயந்திகிராமம், சாலியபுர, மங்கடவல, லிங்கலபறை, கட்டமான்குளம் ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, அநுராதபுரம் புதிய நகர நீர் வழங்கல் அமைப்பு, மிஹிந்தலை நீர் வழங்கல் அமைப்பு, கந்துவடபற, ருவங்கம, வெல்லமோரண, தரியங்குளம், பலுகஸ்வௌ, சத்தம்பிகுளம், அம்பதலகம, பொலிஸ் கிராமம், மஹிந்த ராஜபக்ஷ மாவத்தை, கிரிந்தேகம, கன்னட்டிய மற்றும் குருந்தங்குளம் ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles