ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் நிலைமை காரணமாக விதிக்கப்பட்ட விதிகளைத் தளர்த்தி புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, ஆரோக்கியமான விலங்குகளைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த வாரத்திற்குள் நோய் பரவல் ஓரளவு குறையும் எனவும் அதன் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
இந்த வர்த்தமானி நேற்று முதல் மறு அறிவித்தல் வரை செல்லுபடியாகும்.